எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல அதிகாரிகளுடன் எம்பிக்கள் ஆய்வு

உளுந்தூர்பேட்டை, அக். 12: உளுந்தூர்பேட்டை அடுத்த நகர் கிராமத்தில் ரயில் நிலையம் உள்ளது. சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இந்த ரயில் நிலையத்தின் வழியாக தினந்தோறும் சென்னையில் இருந்து திருச்சி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு 55க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருகிறது.

இந்த எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஒன்று கூட உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தில் நிற்பது இல்லை. உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்ல வேண்டும் என 100க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் ரயில்வே அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில், எக்ஸ்பிரஸ் ரயில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்வதற்கான ஏற்பாடுகள் குறித்து ரயில்வே துறை அதிகாரி களிடம் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி எம்பிக்கள் ராஜேந்திரன் மற்றும் காமராஜ், குமரகுரு எம்எல்ஏ  ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பின்னர் எம்பிக்கள் காமராஜ் மற்றும் ராஜேந்திரன் கூறுகையில், உளுந்தூர்பேட்டையில் ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் விழுப்புரத்தில் இருந்து திருச்சிக்கு ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் சேவை துவங்கப்பட உள்ளது. அந்த ரயில் உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்லும், என்றார்.

முன்னதாக உளுந்தூர்பேட்டையில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு புதிதாக ரயில்பாதை அமைப்பதற்கான பணிகள் குறித்தும் எம்பிக்கள் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

தென்னக ரயில்வே தலைமை பொறியாளர் சங்கரநாராயணன், முதன்மை போக்குவரத்து அலுவலர் விஜயபிரகாஷ் டிஎஸ்பி ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Related Stories: