கள்ளக்குறிச்சியில் உடல் பருமனை குறைப்பதற்கான சிறப்பு முகாம்

விழுப்புரம், அக். 12: 21ம் நூற்றாண்டில் உடல் பருமன் என்பது உலகம் முழுவதும் பெரும்பான்மையாக உள்ளது. மேலும், உடல் பருமன் நோய் வாழ்க்கை முறை நோய்களான சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு, மூட்டுவலி, இதயநோய்கள், குறட்டை, குழந்தையின்மை, சிலவகை புற்றுநோய்களுக்கும் வழிகாட்டியாக விளங்குகிறது. தற்போது, குணப்

படுத்த முடியாத உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய்க்கு உடல்பருமன் அறுவை சிகிச்சை ஒரு சிறந்த சிகிச்சை முறையாக இருக்கிறது. இப்போது, இந்த அறுவை சிகிச்சையானது தமிழக அரசின் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் உயிர்காக்கும் அறுவை சிகிச்சையாக அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.  இதனை முன்னிட்டு, உலக புகழ் பெற்ற கோவை ஜெம் மருத்துவமனை கள்ளக்குறிச்சியில், எஸ். ஆர். பார்க் திருமண மஹாலில் வரும் 14ம்தேதி காலை 9 மணிக்கு சிறப்பு உடல்பருமன் அறுவை சிகிச்சை முகாம் நடக்

கிறது. இதில், சிறப்பு உடல் பருமன் அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் பிரவீன்ராஜ், சரவணக்

குமார் ஆகியோர் தலைமையில், மருத்துவ குழுவினர் ஆலோசனை வழங்குகின்றனர். இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Related Stories: