ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை பாஜக முற்றுகை

புதுச்சேரி, அக். 12: புதுவை தட்டாஞ்சாவடியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை பாஜகவினர் நேற்று காலை திடீரென முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மாநில தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ., தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் நிர்வாகிகள், கட்சியினர், பெண்கள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஊழல், முறைகேடு நடப்பதாக கூறி, இதனை கண்டித்து இப்போராட்டம் நடந்தது.முன்னதாக, பாஜக நிர்வாகிகள், விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ரகு

நாதனை சந்தித்து குறைகளை தெரிவித்தனர். அதற்கு ரகுநாதன், ஊழியர்களுக்கு 10 மாதமாக சம்பளம் இல்லை, தீபாவளி போனஸ் கடந்தாண்டு தரவில்லை. நிதி இல்லாததால் தான் இந்த நிலை என கூறினார். நாம் குறைகளை கூறினால், பதிலுக்கு அதிகாரி நம்மிடமே குறைகளே கூறியதால் பாஜகவினர் அதிர்ச்சியடைந்தனர்.தொடர்ந்து சாமிநாதன் எம்எல்ஏ., நிருபர்களிடம் கூறும்போது, விவசாயி

களுக்கு பயனளிக்கும் ஈநாம் திட்டத்தில் மத்திய அரசு நிதி அளித்தும் அதனை சரிவர செயல்படுத்தவில்லை. ஈநாம் திட்ட நிதி, ஒப்புதல் வழங்கப்பட்ட வேலை

களுக்கு செலவு செய்யாமல் வேறு வேலைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. வங்கிகள் மூலம் விவசாயி

களுக்கு பணம் செலுத்தப்படவில்லை. கமிட்டியில் நீண்டகாலமாக ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. உழவர்சந்தை வியாபாரிகளின் சந்தையாகவே நடக்கிறது. மொத்த வியாபாரிகள் தான், பெரிய மார்க்கெட்டில் காய்கறிகளை வாங்கிவந்து அதிக விலைக்கு விற்கின்றனர். சரியான எடையும் இல்லை. உழவர்சந்தை மக்களை ஏமாற்றும் சந்தையாக மாறிவருகிறது. இதுபோல் பலதரப்பட்ட ஊழலில் மிதக்கும் கமிட்டியில் கவர்னர் களஆய்வு செய்து, அனைத்து ஊழலையும் வெளிக்கொண்டுவர வேண்டும் என்றார். பாஜகவினரின் இப்போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: