மதகடிப்பட்டில் கால்வாய் தூர்வாரும் பணி

திருபுவனை, அக். 12: பிரெஞ்சு ஆட்சியாளர்கள் காலத்தில் புதுச்சேரி மதகடிப்பட்டில்  கட்டப்பட்ட கால்வாய் தூர்வாரும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ரூ.7.5 லட்சம் மதிப்பில் 11.5 கிமீ தூரத்துக்கு நடைபெறும் இப்பணிகளை திருபுவனையில் உள்ள தனியார் தொழிற்சாலை மேற்கொள்கிறது. சிறப்பு அழைப்பாளராக புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி கலந்து கொண்டு, தூர்வாரும் பணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.மதகடிப்பட்டு, திருபுவனை திருவண்டார்கோவில், கலிதீர்த்தாள்குப்பம், சன்னியாசிகுப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள மழை நீர் வடிகால் வாய்க்கால்கள் அனைத்தையும் தூர்வாரி திருவண்டார்கோவிலில் உள்ள ஏரிக்கு செல்லும் வகையில் அனைத்து பணிகளையும் தனியார் தொழிற்சாலை செய்து தருகிறது.இதேபோன்று திருபுவனையில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் தானாக முன்வந்து சமூக பணிகளை செய்ய வேண்டும் என கவர்னர் கிரண்பேடி கேட்டுக்கொண்டார்.நிகழ்ச்சியில் திருபுவனை தொகுதி எம்எல்ஏ கோபிகா, கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சீத்தாராமன், புதுச்சேரி பொதுப்பணித்துறை நீர்பாசன கோட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.மேலும் மதகடிப்பட்டில் இருந்து கலிதீர்த்தாள்குப்பம் செல்லும் மயிலம் பாதையில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.நிகழ்ச்சியில் புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சண்முகசுந்தரம், செயற்பொறியாளர் (நீர்பாசனம்) தாமரைப்புகழேந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: