சாத்தப்பாடி நீர்த்தேக்க தொட்டியில் குழாய் உடைந்து வீணாகும் காவிரி கூட்டு குடிநீர்

மேச்சேரி, அக். 11:மேச்சேரி அடுத்த சாத்தப்பாடியில் குடிநீர் வடிகால் வாரிய நீர்த்தேக்கத் தொட்டியின் குழாய் உடைந்து, லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வெளியேறி வீணாகி வருகிறது. சேலம் மாவட்டம் மேச்சேரி சுற்றுவட்டார கிராமங்களுக்கு, காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம், வாரத்தில் ஒரு நாள் குடிநீர் விநியோகித்து வருகின்றனர். பல கிராமங்களில் ேபாதிய அளவு குடிநீர் கிடைக்காமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

மேச்சேரி அடுத்த சாத்தப்பாடி கிராமத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு சொந்தமான ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து எடுத்துவரப்படும் தண்ணீரை, இந்த தொட்டியில் நிரப்பி, பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் விநியோகித்து வருகின்றனர்.  

இந்நிலையில், இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் குழாயில் பழுது ஏற்பட்டு, கடந்த ஒரு வாரமாக தினமும் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது. அருகில் உள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது. குழாய் உடைந்ததால், கிராமங்களுக்கு வாரம் ஒரு நாள் விநியோகிக்கப்படும் குடிநீரின் அளவையும் குறைத்துவிட்டனர். இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகின்றனர். உடைந்த குழாயை சீரமைத்து, போதிய அளவு குடிநீர் விநியோகம் செய்யக்கோரி, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரியிடம் பலமுறை புகார் செய்யும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்ைல என பொதுமக்கள் புகார் ெதரிவிக்கின்றனர்.

Related Stories: