ஆத்தூர் நகராட்சியில் குடிநீரில் சாக்கடை கலப்பது சரி செய்யப்பட்டது

ஆத்தூர்.அக்.11: ஆத்தூர் நகராட்சி 23வது வார்டு நாராயணசாமி தெருவில், குடிநீரில் சாக்கடை கலப்பதை கண்டறிந்த ஊழியர்கள், உடனடியாக குழாயை சீரமைத்தனர். சேலம்  மாவட்டம் ஆத்தூர் நகராட்சி 23வது வார்டு நாராயணசாமி  தெருவில் வசிக்கும் மக்களுக்கு விநியோகிக்கும் காவிரி குடிநீரில், கடந்த 2 மாதமாக சாக்கடை கழிவுநீர் கலந்து வந்ததாகவும், இதனால் தொற்று நோய் பரவுவதாகவும், பல முறை புகார் தெரிவித்தும், நகராட்சியில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொது மக்கள் தெரிவித்தனர். மேலும், நகராட்சியில் விநியோகித்த குடிநீரை பாட்டில்களில் பிடித்து காட்டி புகார் தெரிவித்தனர். இதுகுறித்து தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.

இதையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுத்த நகராட்சி ஆணையாளர் (பொ) சென்னுகிருஷ்ணன், நகராட்சி பணி மேற்பார்வையாளர் தேவி தலைமையில் ஊழியர்களை நாராயணசாமி தெருவிற்கு அனுப்பி வைத்தார். அவர்கள் அங்குள்ள குடிநீர் குழாய் இணைப்பு பகுதிகளில் குழிகளை தோண்டி, எங்கு குடிநீருடன் சாக்கடை கலக்கிறது என்பதை கண்டறிந்தனர். பின்னர் அந்த உடைந்த குழாயை சீரமைத்தனர். இதையடுத்து சுத்தமான குடிநீர் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

Related Stories: