மாநகராட்சியில் பிளாஸ்டிக்

மாசில்லா பேரணிதிருச்சி, அக்.11: பிளாஸ்டிக் மாசில்லா மாநகராட்சியாக உருவாக்கிடவும், பிளாஸ்டிக் பயன்பாடுகளை தவிர்ப்பது மற்றும் மறுசுழற்சி செய்வது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திருச்சி மாநகராட்சி சார்பில் பேரணி நடந்தது. பேரணியை தில்லைநகர் மக்கள் மன்றத்தில் உதவி கமிஷனர் பிரபாகரன் துவக்கி வைத்தார். மக்கள் மன்றத்திலிருந்து பேரணியில் வந்தவர்கள் தில்லைநகர் முதல் குறுக்கு தெரு மெயின் ரோடு வழியாக 12வது குறுக்குதெரு இருபுறமும் உள்ள 500க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வீடுகளுக்கு துண்டுபிரசுரம் வழங்கினர். மாநகராட்சி சுகாதார அலுவலர் தலை விருச்சான், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: