மணல் கடத்தல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

திருச்சி, அக்.11: திருவெறும்பூர் வருவாய்துறை மற்றும் காவல்துறை சாபில் மணல் கடத்தல் தடுப்பு விழிப்பணர்வு பேரணி நமது மண், நமது மானம், நமது உரிமை என்ற தலைப்பில் கிளியூரில் இருந்து பனையகுறிச்சி வரை நடந்தது. திருச்சி ஆர்டிஓ அன்பழகன் தலைமை வகித்தது பேரணியை துவக்கி வைத்து பேசியதாவது:  ஆறு, ஏரி, ஓடைகளில் மணல் அள்ளுவதால் கரை அரிப்பு ஏற்பட்டு விவசாயம் பாதிக்கப்படும். மணல் திருட்டை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்றார். திருவெறும்பூர் டிஎஸ்பி சேகர் முன்னிலை வகித்தார். காவிரி மற்றும் காட்டாற்று வாரிகளில் மணல் எடுப்பது சட்ட விரோதமாகும். நமது சந்ததிகள் வாழ மணல் வளத்தை பாதுகாத்து நீர்வளத்தை பாதுகாப்பது நமது கடமை.

மணல் வளமே அற்றின் வளம், ஆற்றின் வளமே நாட்டின் வளம் என்பதை பொதுமக்கள் உணரவேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசரங்கள் வழங்கப்பட்டது. வருவாய்துறை, காவல்துறை மற்றும் கனிமவளங்கள் துறை உதவி இயக்குனர் அண்ணாதுரை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிர்மலா, மணிவேல், ஆற்றுப்பாதுகாப்பு கோட்ட உதவி செயற்பொறியாளர் தீயணைப்புதுறையினர், வட்டார மருத்துவ அலுவலர்கள், கல்விதுறை மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும் பேரணியில் கலந்து கொண்டவர்கள் ஒவ்வொரு ஊர்களிலும் மணல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி, டெங்குஒழிப்பு விழிப்புணர்வு, வெள்ளதடுப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Related Stories: