பதவி உயர்வு வழங்ககோரி வணிகவரித்துறை சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டம்

திருச்சி, அக். 11: திருச்சி வணிகவரித்துறை சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பணியில் சேர்ந்த நாளை அடிப்படையாக கொண்டு பதவி உயர்வு வழங்க வேண்டும், ஜிஎஸ்டி அமலாக்கப்பட்ட நிலையில் மேம்படுத்தப்பட்ட அளவில் துறை மறுசீரமைப்பு செய்ய வேண்டும், பணியாளர்களுக்கு பணி வரன்முறை, பவானிசாகர் பயிற்சி தகுதிக்கான பருவம் நிறைவு ஆணைகள் ஆகியவற்றை தாமதமின்றி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வணிகவரித்துறை சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் திருச்சி மன்னார்பும் பல்துறை கட்டிட வளாகத்தில் உள்ள அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு வணிகவரி பணியாளர் சங்க மாநில செயலாளர் பத்ரிநாத் தலைமை வகித்தார். முத்துக்குமார், ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வணிகவரி அலுவலர் சங்க மாநில தலைவர் லட்சுமணன் கோரிக்கை குறித்து பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் இளங்கோவன், சுரேஷ்பிரபு ஆகியோர் வாழ்த்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் 26 பெண் ஊழியர்கள் உள்பட 60 பேர் கலந்து கொண்டனர்.

Related Stories: