இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். அம்மளூர் ஈசிஆர் சாலை வளைவில் தேங்கும் மழைநீரால் விபத்து அதிகரிப்பு

முத்துப்பேட்டை, அக்.11:  அம்மளர் ஈசிஆர் சாலை வளைவில் மாதக்கணக்கில் தேங்கி கிடக்கும் மழைநீர் அடிக்கடி விபத்து நடந்து வருகிறது.

முத்துப்பேட்டை அடுத்த எடையூர் ஊராட்சி அம்மளூர் கிழக்கு கடற்கரை சாலை வளைவில் ஏராளமான குடியிருப்புகள், கடைகள் உள்ளன. “எஸ்” வடிவிலான இந்த ஆபத்தான வளைவில் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகிறது.இதில் சாலையை ஒட்டி மேற்கு பகுதி சுமார் 100மீ தூரத்திற்கு மிகவும் தாழ்வாக உள்ளதால் மழை பெய்யும்போது மழைநீர் வடிய வழியின்றி மாதக்கணக்கில் தேங்கி சாலையையும் ஆக்கிரமித்துள்ளது. இதனால் அப்பகுதியில் செல்லும் வாகனங்களுக்கு மிகவும் இடையூறாக உள்ளதால் அடிக்கடி இப்பகுதியில் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. அதேபோல் அப்பகுதியில் நடமாடும் மக்களும் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.

மேலும் மாதக்கணக்கில் மழைநீர்  தேங்கி கிடப்பதால் தொற்றுநோய்களும் பரவி வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஒன்றிய அதிகாரிகள், நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் தண்ணீரை அகற்ற எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டும் நெடுஞ்சாலை துறையினர் இனியாவது துரித நடவடிக்கை எடுத்து மாதக்கணக்கில் தேங்கி கிடக்கும் மழைநீரை அகற்றி தண்ணீர் தேங்காமல் இருக்க அப்பகுதி நிலமட்டதை உயர்த்தி உரிய பணியை செய்து தரவேண்டும் இல்லையேல் இப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் குதிக்கும் அவசியம் ஏற்படும் என்று அப்பகுதியை சேர்ந்த மூத்த காங்கிரஸ் உறுப்பினர் முருகப்பன் மற்றும் அப்பகுதி  மக்கள் தெரிவித்தனர்.

Related Stories: