திமுக எம்எல்ஏ வலியுறுத்தல் கூத்தாநல்லூரில் போலீசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்

நீடாமங்கலம், அக்.11:  கூத்தாநல்லூரில் மன்னார்குடி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்  நடந்தது. மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமை வகித்தார். முன்னாள் எம்.பியும் மாநில விவசாய அணி செயலாளருமான ஏ.கே.எஸ்.விஜயன், தலைமை செயற்குழு உறுப்பினர் தலையாமங்கலம் பாலு முன்னிலை வகித்தனர். மன்னார்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் கமரேசன், மேற்கு ஒன்றிய செயலாளர் தன்ராஜ், மாவட்ட துணைச்செயலாளர் காலைவாணிமோகன், மாவட்ட இளைஞரணி இளையராஜா, கூத்தாநல்லூர் நகர செயலாளர் காதர்உசேன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர பல்வேறு அணி பொறுப்பாளர்கள் 150 பெண்கள் உள்ளிட்ட 1000 பேர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில கடந்த 8ம் தேதி மாலை  மன்னார்குடி திமுக கிழக்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதி செல்வம் என்பவரை கடந்த 15 மாதங்களுக்கு முன் குடிதாங்கிச்சேரி என்ற இடத்தில் ஒரு கும்பல் அரிவாலாள் வெட்டியது. ஆனால் அவர் தீவிர சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார்.

இந்த சம்பவம் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை இன்னும் போலீஸ் கைது செய்யாததால் அதே குற்றவாளி மேலும் 15க்கும் மேற்பட்ட கூலி படையினருடன் மீண்டும் 8ம் தேதி செல்வத்தை கொலை செய்ய வந்துள்ளனர். செல்வம் காரில் இல்லாததால் டிரைவர் யோகேஷ்வரன், உதவியாளர் பாஸ்கர் இருவரையும் சரமாரியாக வெட்டி காரை சேதப்படுத்தி சென்றனர். அவர்களை இன்று மாலைக்குள் (நேற்று) காவல்துறை பிடித்து கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் மாவட்ட அளவில் திமுக சார்பில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் அறிவித்திருந்தார்.

Related Stories: