ரயிலில் 1250 டன் அரிசி அனுப்பிவைப்பு அரசு மருத்துவமனைகளில் பயோமெட்ரிக் வருகை பதிவை உடனே அமல்படுத்த வேண்டும்

திருத்துறைப்பூண்டி, அக்.11:  திருத்துறைப்பூண்டி திமுக எம்எல்ஏ ஆடலரசன் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது: தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு மருத்துவமனைகள்மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் ஏழை எளிய மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். திமுக ஆட்சியில் கலைஞர் காப்பீடு திட்டம் உருவாக்கப்பட்டு  பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள உயிர்காக்கும்   அறுவை சிகிச்சைகளை இலவசமாக செய்துகொள்ள வழிவகைகள் செய்யப்பட்டு தரமான சிகிச்சையும் காலத்தோடு  அளிக்கப்பட்டது.   ஆனால் தற்போது நடக்கும் ஆட்சியில் முதலமைச்சரின் விரிவான காப்பீடுத்திட்டம் என்கிற பெயரில் கலைஞர் காப்பீடு திட்டம் பெயர் மாற்றப்பட்டுள்ளதே தவிர அதற்கான பயன்பாடு என்பது மிகவும் குறுகியிருக்கிறது. அரசு மருத்துவமனைகளிள் பொதுமக்களுக்கான பொதுசிகிச்சை காலை 8 மணிக்கு தொடங்கி மதியம் 12 வரை அளிக்கப்பட வேண்டிய நிலையில்,  அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களின் வருகை என்பது முறையாக

பேனப்படுவதில்லை.

அரசு மருத்துவமனைகளில் சமீபத்தில்  ஆய்வுகளை மேற்கொண்டபோது அங்கே மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப்பணியாளர்கள்ஆகியோரின் வருகை  தாமதமாகவே இருந்ததை காணமுடிந்தது. இதனால் நோயாளிகள் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஒருமணி நேர தாமதம் என்பது ஒரு மருத்துவமனையில் சுமார்  50 நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கான நேரமாகும். ஒரு நாளைக்கு 50 நோயாளிகளுக்கு சிகிச்சை கிடைக்கவில்லை எனில், ஒரு மாதத்திற்கு 1500 நோயாளிகளின் சிகிச்சை தவிர்க்கப்படுகிறது. ஒரு அரசு மருத்துவமனையில் ஒரு மாதத்தில் 1500 நோயாளிகள் எனில் தொகுதியில் உள்ள சுமார் 10 மருத்துவமனைகளில் 15000 நோயாளிகளின் சிகிச்சை மறுக்கப்பட்டு விடுகிறது என்பதை அரசும், சுகாதாரத்துறையும் உணரவேண்டும். எனவே  பொதுமக்களுக்கு ஏற்படும் இந்த சிரமங்களை நிவர்த்தி செய்யும் வகையில் அரசு மருத்துமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தமிழக அரசும் சுகாதாரத்துறையும்  பயோமெட்ரிக் வருகைப்பதிவை உடனே உறுதி செய்ய வேண்டும் என்பதையும் அரசு காப்பீடுத்திட்ட பலன்களை தகுதியுடைய தனியார் மருத்துமனைகளிலும் தடையின்றி செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: