தேங்கிய மழைநீர், குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

முத்துப்பேட்டை அக்.11: முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளிலும் பேரூராட்சி நிர்வாகத்தால் சமீபக்காலமாக குப்பைகள் மற்றும் கழிவுப் பொருட்கள் சரிவர அகற்றப்படுவதில்லை. இதனால் நகரம் முழுவதும் ஆங்காங்கே சாலைகளில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. கழிவுப் பொருட்கள் பல இடங்களில் கிடந்து அசுத்தமான காட்சி அளிக்கிறது. மேலும் சாக்கடை கால்வாய்களையும் சுத்தம் செய்யாததால் கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்க்கேட்டை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாலையில் மழை நீர் தேங்கி சுகாதார சீர்க்கேடு ஏற்பட்டுள்ளது.இதற்கு பேரூராட்சி நிர்வாகம் எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் இப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். எனவே உடனே தெருக்களில் ஆங்காங்கே தேங்கி கிடக்கும் மழைநீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும், அதேபோல் சுகாதார சீர்க்கேட்டை ஏற்படுத்தும் வகையில் சாலையில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற

வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: