இன்று துவக்கம் எடையூர் கொள்ளிடம் கூட்டுகுடிநீர் திட்ட சம்பு ஆய்வு பொதுமக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும்

முத்துப்பேட்டை,அக்.11:  திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு கொள்ளிடம் கூட்டுகுடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் இணைப்புககளுக்கு கொள்ளிடத்திலி ருந்து மன்னார்குடி, கோட்டூர், திருப்பத்தூர், மாங்குடி, கடுவெளி, சங்கேந்தி வழியாக எடையூர் சம்புக்கு வந்து அங்கு பம்பிங் செய்யப்படும் குடிநீர் மெயின் பைப்லைன் வழியாக முத்துப்பேட்டை ஒன்றியத்தை சேர்ந்த ஊராட்சி குடிநீர் டேங்குகளை சென்றடைகிறது. பின்னர் அருகிலிருக்கும் ஊராட்சி கிராம பகுதிகளுக்கு பைப்லைன் வழியாக குடிநீர் கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. அதேபோல் எடையூர் சம்பிலிருந்து பம்பிங் செய்யப்படும் குடிநீர் முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதிக்கு சென்று அடைகிறது. இந்நிலையில் தினசரி பம்பிங் செய்யப்படும் குடிநீர் அந்தந்த பகுதிக்கு செல்லும்போது குடிநீரின் பாதிஅளவு குறைந்து விடுகிறது. இந்த நீர்வரத்து குறைவால் மக்களுக்கு வழங்கும் குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளதாக நீண்ட காலமாக முத்துப்பேட்டை பகுதி ஊராட்சி நிர்வாகங்கள  கவலையுடன்  தெரிவித்து வந்தனர்.  

தினந்தோறும் விநியோகம் செய்யப்படும் குடிநீரில் குளறுபடி நீடித்துக்கொண்டே செல்கிறது. தற்பொழுது மழைக்காலம் தொடங்கி உள்ளதால் இதன் மூலம் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவ வாய்ப்புகள் உள்ளது. இது குறித்து பொதுமக்கள் சார்பில் பல்வேறு புகார்கள் எழுந்தும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. இந்தநிலையில் பொதுமக்கள் புகாரையடுத்து நேற்று திருத்துறைப்பூண்டி திமுக எம்எல்ஏ ஆடலரசன், முத்துப்பேட்டை அடுத்த எடையூர் கொள்ளிடம் கூட்டுகுடிநீர் திட்ட சம்புவை ஆய்வு செய்தார். இதில் அங்குள்ள பணியாளர்களிடம் பொதுமக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் தொட்டிகளை உடனுக்குடன் சுத்தம் செய்யவேண்டும். குடிநீர் தொட்டியில் குளோரிங் பவுடர் போடவேண்டும் என எம்எல்ஏ ஆடலரசன் அறிவுறுத்தினார். அப்பொழுது எடையூர் ஊராட்சி செயலாளர் கணேஷ்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் நாகராஜன், திமுக நிர்வாகி  நடராஜன், மற்றும் ஊராட்சி செயலாளர் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: