தஞ்சை வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

கும்பகோணம், அக். 11:  கும்பகோணத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட திமுக நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் தண்டபாணி தலைமை வகித்தார். எம்எல்ஏக்கள் சாக்கோட்டை அன்பழகன், துரை.சந்திரசேகரன் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் அய்யாராசு வரவேற்றார். வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில் திமுக தலைவராக பொறுப்பேற்று கொண்டு முதன்முறையாக தஞ்சைக்கு வரும் 19ம் தேதி வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது. திமுக நிர்வாக பொறுப்புகளில் 2 பொறுப்புகளில் இருந்து வரும் கழக நிர்வாகிகளிடம், இரண்டில் ஒன்றை தாங்களாகவே முன்வந்து விலகல் கடிதத்தை நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் மூலம் மாவட்ட கழகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

தஞ்சை வடக்கு மாவட்ட துணை செயலாளர் பெண் பொறுப்புக்கு மாவட்ட கழக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர், மாவட்ட கழகம் நடத்திய எந்த கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை, தலைமை கழகம் அறிவித்த பொதுக்குழு, கள ஆய்வு கூட்டம் உள்ளிட்ட கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. எனவே அவருக்கு பதிலாக பெண் உறுப்பினர் ஒருவரை, மாவட்ட கழக துணை செயலாளராக கழக தேர்தல் மூலம் தேர்ந்தெடுப்பது. வாக்காளர் சேர்த்தல், நீக்கல் பணிைய  வடக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டும். தஞ்சை வடக்கு மாவட்ட கழகத்தில் காலியாக உள்ள பதவிகள் நியமிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய செயலாளர்கள் ராமலிங்கம், ரவிச்சந்திரன், மாவட்ட பொருளாளர் சேக்தாவூது உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நகர செயலாளர் தமிழழகன் நன்றி கூறினார்.

Related Stories: