கூட்டுறவு வங்கிகளில் பாரபட்சமாக விவசாய கடன்கள் வழங்குவதை கண்டித்து 22ம் தேதி ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், அக். 11:  கும்பகோணத்தில் தஞ்சை புறநகர் மாவட்ட தமிழ்நாடு உழவர் பேரியக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. உழவர் பேரியக்க மாநில துணைத்தலைவர் கலியமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ரமேஷ், உழவர் பேரியக்க மாவட்ட செயலாளர் கோபு முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் தியாகபக்கிரிசாமி வரவேற்றார். தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில தலைவர் ஆலயமணி தலைமை வகித்தார். கூட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பாரபட்சமாக விவசாய கடன் வழங்குவதை கண்டிப்பது. கோட்டூர், திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலைகளில் கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை வழங்காததை கண்டிப்பது.

2 சர்க்கரை ஆலைகளில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பலமாதங்களாக சம்பளம் வழங்காததை கண்டித்து வரும் 22ம் தேதி தமிழ்நாடு உழவர் பேரியிக்கம் சார்பில் கும்பகோணம் காந்தி பூங்காவில் ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உழவர் பேரியக்க மாநில துணை செயலாளர் சோதிராஜ், பாமக மாநில துணை பொது செயலாளர் வெங்கட்ராமன், பாமக மாவட்ட செயலாளர்கள் ரவிச்சந்திரன், சங்கர், பாமக மாவட்ட தலைவர் திருஞானம்பிள்ளை, பாமக ஒருங்கிணைந்த மாவட்ட அமைப்பு செயலாளர் முருகன் பங்கேற்றனர். ஒன்றிய தலைவர் தங்கஅன்பழகன் நன்றி கூறினார்.

Related Stories: