2 பேர் கைது கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை கண்டித்து ஆசிரியர் கழகத்தினர் போராட்டம்

கும்பகோணம். அக். 11:  கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை போக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரி முன் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் போராட்டம் நடந்தது. தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக துணைத்தலைவர் சகாதேவன் தலைமை வகித்தார். மண்டல தலைவர் ராஜராஜன் முன்னிலை வகித்தார். மாநில துணைத்தலைவர் ரமேஷ், பேரவை உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை போக்க விரைவில் ஆசிரியர்கள் நியமனம் வேண்டும். 2016ம் ஆண்டு முதல் எம்பில்., பிஎச்டி முடித்தவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும். தர ஊதிய நிலுவைத்தொகை வழங்க வேண்டும்.

2015ம் ஆண்டில் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு முழு தகுதிச்சான்று, பணி வரன்முறை ஆணை மற்றும் தகுதிகாண் பருவம் முடித்தமைக்கான ஆணை வழங்க வேண்டும். உறுப்பு கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக மாற்றி அரசாணை வெளியிட வேண்டும். அரசு கல்லூரிகளின் பாதுகாப்புக்கென அறிவிக்கப்பட்ட சுற்றுச்சுவர் கட்டுவதற்கான நிதி ஒதுக்கீட்டு ஆணை வழங்க வேண்டும். கழக பொறுப்பாளர்கள் மீது விசாரணையின்றி மேற்கொண்ட நடவடிக்கைகளை கைவிட வேண்டும உள்ளட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. அப்போது இதே கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 14ம் தேதி தஞ்சை பனகல் கட்டிடம் முன் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Related Stories: