கலெக்டர் ஆய்வு பொன்னமராவதி பகுதி கோயில்களில் நவராத்திரி கொலு

பொன்னமராவதி, அக்.11:  பொன்னமராவதி பகுதியில் உள்ள பல்வேறு கோயில்களில் நவராத்திரி கொலு வைத்து வழிபாடு செய்யப்பட்டு

வருகின்றது. பொன்னமராவதி ராமலிங்க சவுடாம்பிகை கோயில், அழகியநாச்சியம்மன் கோயில், கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில், பொன்.புதுப்பட்டி ராமாயண மடம் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் நவராத்திரி கொலு வைத்து வழிபாடு செய்யப்பட்டு வருகின்றது.

ஆலங்குடி, அக்.11:  ஆலங்குடி அருகே பனங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு காய்ச்சல் வருவதை தடுக்க நிலவேம்பு

குடிநீர் வழங்கப்பட்டது. தற்போது பெய்துவரும் மழையால் ஆங்காங்கே தேங்கியுள்ள மழைநீரில்  கொசு மற்றும் புழுக்கள் உருவாகியுள்ளன. இதனால் காய்ச்சல் போன்ற நோய்கள் பரவி வருகிறது.

இந்நிலையில் கீரமங்கலம் பகுதியில் பலருக்கு காய்ச்சல் பரவியுள்ளது. காய்ச்சல் நோய் ஏற்படுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிராமங்கள் தோறும் மருந்து தெளிக்கும் பணிகளும், டெங்கு புழு கண்டறியும் பணியும் நடந்து வருகிறது. இந்நிலையில் நிலவேம்பு குடிநீர் பருகினால் காய்ச்சலை தடுக்க முடியும் என்பதால் கீரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சித்ராதேவி மற்றும் சித்த மருத்துவப்பிரிவினர் இணைந்து பனங்குளம் வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கருப்பையன் கோரிக்கையை ஏற்று மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினர். நிகழ்ச்சியில் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் நிலவேம்பு குடிநீர் வழக்கப்பட்டது. விழாவில் கிராமத்தினர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள், சத்துணவுப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: