விவசாயிகளுக்கு வேண்டுகோள் திருவரங்குளம் ஒன்றியத்தில் ரூ.1.38 கோடியில் வளர்ச்சி பணிகள்

புதுக்கோட்டை, அக்.11:  புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை கலெக்டர்  கணேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கலெக்டர் கூறியதாவது: திருவரங்குளம் ஒன்றியம் கைக்குறிச்சி ஊராட்சி, கைக்குறிச்சியில் ரூ.2.82 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளைக்கிணறு அமைக்கும் பணி, கத்தக்குறிச்சி ஊராட்சி, பெரியநாயகிப்புரத்தில் ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் பசுமை வீடு, ரூ.1.70 லட்சம் மதிப்பீட்டில் பிரதமமந்திரி திட்டத்தின்கீழ் வீடுகட்டும் பணி, தனிநபர் இல்ல கழிவறை, எஸ்.குளவாய்ப்பட்டி ஊராட்சி, எஸ்.குளவாய்ப்பட்டியில் ரூ.12.60 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை கட்டும் பணி,  

ரூ.18.72 லட்சம் மதிப்பீட்டில் தவனேரிகுளம் தூர்வாருதல், பாலையூர் ஊராட்சி, பாலையூரில் ரூ.1.50 லட்சத்தில் மரக்கன்றுகள் மற்றும் பனைவிதை ஊன்றுதல், பேச்சேரி ஏ.டி காலனியில் ரூ.46.21 லட்சத்தில் தார்சாலை பணி,

ரூ.17.25 லட்சம் மதிப்பீட்டில் தடுப்புசுவர் அமைத்தல், மலக்குடி ஏ.டி காலனியில் ரூ.29 லட்சத்தில் சமுதாயக்கூடம் அமைத்தல், திருவரங்குளம் ஊராட்சி, பெரியநாயகிபுரத்தில் ரூ.6.25 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி சுற்றுச்சுவர் கட்டுதல் என மொத்தம் ரூ.1.38 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மரக்கன்றுகளை தினமும் உரிய முறையில் நீருற்றி பராமரிக்கவும், தார்சாலைகளை சரியான அளவுகளில் பணி மேற்கொள்ளவும், புதிதாக அமைக்கப்பட்ட ஆழ்துளைக்கிணறு மூலம் குடிநீர் தேவைப்படும் இடங்களுக்கு கூடுதலாக குடிநீர் குழாய் அமைத்து குடிநீர் தடையின்றி விநியோகம் மேற்கொள்ளவும், முடிவுற்ற பணிகளை உரிய முறையில் பராமரிக்கவும், மேலும் நடைபெறும் பணிகளை தரமான கட்டுமானப் பொருட்களை கொண்டு கட்டி முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

Related Stories: