அதிக மகசூல் பெற விதை பரிசோதனை அவசியம்

புதுக்கோட்டை, அக்.11: விதை பரிசோதனை செய்வதன் மூலம் அதிக மகசூல் பெறலாம் என்று திருக்கோகர்ணம் விதை பரிசோதனை மையம் விவசாயிகளை கேட்டுக்கொண்டுள்ளது. புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதியில் விதைப்பரிசோதனை நிலையம் இயங்கி வருகிறது.  விதையின் தரத்தை அறிய விதைப்பரிசோதனை செய்யப்படுகிறது. இந்நிலையத்தில் விதை விவசாயிகள் மற்றும் விதை விற்பனையாளர்கள், விதை உற்பத்தியாளர்களிடம் இருந்து பெறப்படும் பணிவிதை மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விதைச்சட்டம் 1966 பிரிவு 7(பி)யின் படி ஒவ்வொரு பயிருக்கும் குறைந்தபட்ச முளைப்புத்திறன் தரம் நிர்ணயம் செய்து  அறிவிக்கப்பட்டுள்ளது. நெற்பயிருக்கு 80 சதவீதம வீரிய மக்காச்சோளத்திற்கு 90 சதவீதம் உளுந்து, துவரை பாசிப்பயிறு வகைகளுக்கு 75 சதவீதம், நிலக்கடலைக்கு 70 சதவீதம் மற்றும் கம்பு, சோளம், கேழ்வரகு ஆகிய பயிருக்கு 75 சதவீதம் ஆகும். இந்த தரத்திற்கு குறைவான விதைகளை விதைத்தால் மகசூல் இழப்பு நேரிடும்.

ஒவ்வொரு விவசாயியும் சாகுபடி செய்ய வாங்கும் விதைகளையோ அல்லது தங்கள் கைவசம் உள்ள விதைகளையோ விதைப்பதற்கு முன் முளைப்புத்திறன் அறிய விதைமாதிரிகளை விதைப்பரிசோதனை நிலையத்தில் ரூ.30  ஆய்வு கட்டணமாக செலுத்தி பயிர் மற்றும் ரகம் குவியல் எண் ஆகியவை குறித்த  விபர சீட்டுடன் கொடுத்து முளைப்பு திறனை தெரிந்து கொள்ளலாம். நெல் விதை 50 கிராம், உளுந்து,  பாசிப்பயறு 100 கிராம், மக்காச்சோளம், நிலக்கடலை 500 கிராம், எள், ராகி 25 கிராம் ஆகிய அளவில் விதை மாதிரி எடுத்து தங்களது முழு முகவரியுடன் கூடிய கடிதத்துடன் மேற்கண்ட முகவரிக்கு அனுப்பி விதையின் முளைப்புத்திறன் அறிந்து தரமான விதைகளை பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டுமாறு   விதைப்பரிசோதனை நிலையம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories: