ஆலங்குடி அருகே அரிவாளை காட்டி மிரட்டி கொள்ளையன் தப்பிஓட்டம்

ஆலங்குடி, அக்.11:  ஆலங்குடி அருகேயுள்ள திருவரங்குளத்தில் கோயில், பள்ளிவாசல், வீடு உள்பட 4 இடங்களில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர் போலீசை கண்டதும் அரிவாளை காட்டி மிரட்டி தப்பியோடி விட்டான். கொள்ளையன் விட்டுச் சென்ற நகை, செல்போன், கொள்ளையனின் பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள திருவரங்குளத்தில் சிவன்கோயில், காளியம்மன் கோயில் மற்றும் பள்ளிவாசல் உள்ளன. சிவன்கோயில் மற்றும் பள்ளிவாசலில் நுழைந்த மர்ம நபர் அங்குள்ள பூட்டுகளை

உடைத்துள்ளார். அப்போது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வந்ததால் மர்மநபர்  தப்பியோடிவிட்டார். இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் குடியிருக்கும் பிஎஸ்என்எல் ஊழியர் செல்வராஜ் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் வீட்டில் இருந்த 20 பவுன் நகை மற்றும் 4 செல்போன் கொள்ளை

யடித்துச் சென்றுள்ளார்.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆலங்குடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனடியாக விரைந்து சென்ற போலீசார் தப்பியோடிய மர்ம நபரை தேடினர். அதற்குள் தப்பியோடிய கொள்ளையர் காளியம்மன் கோயிலில் உள்ள உண்டியலை உடைத்து திருடி கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து, போலீசார் கொள்ளையனை பிடிக்க முயன்றபோது அரிவாளை காட்டி மிரட்டி கொள்ளையன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். மேலும், கொள்ளையடித்த நகைகள், செல்போனை அங்கேயே விட்டு சென்றதால் போலீசார் அதனை மீட்டனர். கொள்ளைக்காக மர்ம நபர் பயன்படுத்திய டூவீலரை போலீசார் மீட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டுவந்தனர். அந்த டூவீலர் எண் வித்தியாசமாக இருந்தததால், போலீசார் அதிர்ச்சியடைந்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து ஆலங்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்

கொண்டு வருகின்றனர்.

Related Stories: