கலெக்டர் ஆய்வு ஆலங்குடி அரசு பள்ளியில் அறிவியல் ஆய்வகம்

ஆலங்குடி, அக்.11: ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அடல் டிங்கரிங் ஆய்வகத்தை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வனஜா

திறந்து வைத்தார். ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அடல் டிங்கரிங் ஆய்வகம் அமைப்பதற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணிகள் தொடங்கி நடைபெற்றுவந்தது. இதனை சிஇஓ வனஜா நேற்று திறந்து வைத்து பார்வையிட்டார். மத்திய அரசின் அடல் டிங்கரிங் ஆய்வகம் தமிழகத்திலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் முதன்முதலாக ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு வருடத்திற்கும் ரூ.2 லட்சம் வீதம் 5 வருடத்திற்கு ரூ.10 லட்சம் பராமரிப்பு செலவுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அடல் டிங்கரிங் ஆய்வகம் ஏசி வசதி கொண்டதாகும்.

இந்த ஆய்வகத்தில் ட்ரோன், ஏரோமாடலிங், 3 டி பிரிண்டர், ரோபோடிக்ஸ், பயோ மெடிக்கல், மெக்டர்ரானிக்ஸ் புராஜக்ட்ஸ் ஆகிய இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்களை பயன்படுத்தும் விதம் குறித்து ஆசிக் ரஹ்மான் செயல் விளக்கத்துடன் கூறினார். இதனைத்தொடர்ந்து, முதன்மை கல்வி அலுவலர் வனஜா மாணவர்களிடம் கூறுகையில், கல்வி மேம்பாட்டிற்காக வழங்கப்பட்ட இந்த அடல் டிங்கரிங் ஆய்வகத்தை மாணவர் நன்கு பயன்படுத்தி தேர்வுகளில் வெற்றி பெறவேண்டும் என்றார். அறந்தாங்கி டிஇஓ திராவிடச்செல்வம் (பொ), தலைமை ஆசிரியர் சூசை, அரையப்பட்டி பள்ளி தலைமை ஆசிரியர் மாரிமுத்து, ஆர்எம்எஸ்ஏ ஒருங்கிணைப்பாளர் பழனிவேல், கல்வி புரவலர்கள் உள்பட ஏராளமான மாணவர்கள்

கலந்து கொண்டனர்.

Related Stories: