ஜெயங்கொண்டம் வந்தடைந்தது சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் நவராத்திரி விழா துவக்கம்

பெரம்பலூர், அக். 11:  சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் 37ம் ஆண்டு லட்சார்ச்சனை, நவராத்திரி விழா நேற்று துவங்கியது. பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் 37வது ஆண்டு லட்சார்ச்சனை மற்றும் நவராத்திரி விழா நேற்று துவங்கியது. இந்த விழா வரும் 19ம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி நாள்தோறும் மாலை 4 மணிக்கு லட்சார்ச்சனை, நவராத்திரி விழா நடக்கிறது. முதல் நாளான நேற்று உற்சவருக்கு மீனாட்சி அலங்காரம் செய்யப்பட்டது. மதுர காளியம்மனுக்கு அலங்காரம் செய்து சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை திருச்சி உதவி ஆணையர் ராணி, கோயில் செயல் அலுவலர் பாரதிராஜா செய்திருந்தனர். விழாவில் சிறுவாச்சூர், பெரம்பலூர், திருச்சி, அரியலூர், கடலூர், சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று (11ம் தேதி) உற்சவருக்கு மீனாட்சி அலங்காரம் செய்யப்படுகிறது.

இதைதொடர்ந்து உற்சவருக்கு காமாட்சி அலங்காரம், ராஜராஜேஷ்வரி அலங்காரம், துர்கை அலங்காரம், கருமாரியம்மன் அலங்காரம், மாரியம்மன் அலங்காரம், லட்சுமி அலங்காரம், சரஸ்வதி அலங்காரம் செய்யப்படுகிறது. கடைசி நாளான 19ம் தேதி உற்சவருக்கு மகிஷாசுர மர்த்தினி அலங்காரம் செய்து சிறப்புபூஜைகள் நடத்தப்படுகிறது. கோயில் திறப்பு:  சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் வாரத்தில் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை, பவுர்ணமி, அமாவாசை நாட்களிலும் திறந்திருக்கும். நவராத்திரி விழா நாட்களையொட்டி நேற்று முதல் வருகிற 19ம் தேதி வரை தினமும் காலை 6.30 முதல் இரவு 9 மணிவ ரை திறந்திருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: