ஹோமியோபதியில் நாள் பட்ட நோய்களுக்கும் தீர்வு காணலாம்

பெரம்பலூர்,அக்.11: ஹோமியோபதி பக்கவிளைவுகள் இல்லாத மருத்துவ முறை யாகும். சைனஸ், ஆஸ்துமா உள்ளிட்ட நாள்பட்ட நோய்களுக்கு நிரந்தரத் தீர்வுகாணலாம். பெரம்பலூர் மாவட்ட அரசுத்தலைமை மருத்துவமனையில் நடந்த ஹோமியோபதி மருத்துவ விழிப்புணர்வு முகாமில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் காமராஜ் கூறினார். பெரம்பலூர் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் இலவச ஹோமியோ பதி மருத்துவ விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. முகாமிற்கு பெரம்பலூர் மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணைஇயக்குநர் டாக்டர் சசிக்கலா தலைமை வகித்தார். ஹோமியோபதி டாக்டர் ராகுல்ஜி வரவேற்றார். அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் தர்மலிங்கம், இருக்கை மருத்துவர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் காமராஜ் முகாமைத் தொடங்கி வைத்து பேசியதாவது: ஆயுஷ் மருத்துவத்திற்குள் அடங்கியுள்ள ஒருவகை மருத்துவ முறைதான் ஹோ மியோபதி. இது பக்கவிளைவுகள் இல்லாத மருத்துவ முறையாகும். அலோபதி மருத் துவ சிகிச்சையோடு இணைந்தும், ஹோமியோபதி சிகிச்சை முறையை தொடர்ந்து பெற்றுவரலாம்.

உலகில் ஆங்கில மருத்துவமான அலோபதி சிகிச்சைக்கு அடுத்ததாக பல்வேறு நாடுகளில் அதிகப்பட்ச நபர்கள் பயன்படுத்தும் சிகிச்சை முறை ஹோமியோபதி ஆகும். சைனஸ், தோல்நோய்கள், ஆஸ்துமா, மூட்டுவாதம் உள்ளிட்ட நாள்பட்ட நோய்களுக்கு நிரந்தர தீர்வுகாண ஹோமியோபதி மருத்துவமுறை வழிவகுக்கிறது. பெரம்பலூர் மாவட்ட அரசுத்தலைமை மருத்துவமனையில் அனைத்துப் பணிநேரங்களிலும் சித்தாபிரிவுடன் இணைந்துள்ள ஹோமியோபதி சிகிச்சைமுறையை நோயாளிகள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்தார். முகாமில், சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் செந்தமிழ்ச்செல்வி, ஹோமியோபதி டாக்டர் கமலாதேவி மற்றும் செவிலியர்கள், மருந்தாளுநர்கள் கலந்து கொண்டனர்.  முகாமில் பெரம்பலூர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட நோயாளிகள் கலந்துகொண்டு பரிசோதனைகளையும், சிகிச்சைகளையும் பெற்றுச் சென்றனர். முடிவில் சித்தமருத்துவ அலுவலர் டாக்டர் விஜயன் நன்றி தெரிவித்தார்.

Related Stories: