ஆண்டிமடம் வட்டாரத்தில் நெற்பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

ஜெயங்கொண்டம், அக்.11:  ஆண்டிமடம் பகுதியில் உள்ள விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆண்டிமடம் வட்டாரத்தில் சம்பா நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்ந்து விவசாயிகள் பயனடையலாம். மழை, வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை இடர்பாடுகள், விதைக்க இயலாமை மற்றும் பூச்சி, நோய் தாக்குதல் போன்ற காரணங்களால் ஏற்படும் இழப்பிற்கு காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு மட்டும் இழப்பீட்டு தொகை வழங்கப்படும் எனவே நெல் பயிரிடும் விசாயிகள், ராபி பருவத்திற்கு வரும் நவ.30 தேதிக்குள் அருகிலுள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அல்லது மத்திய அரசின் அனுமதி பெற்ற பொது சேவை மையத்தில் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.

1 ஏக்கருக்கு ரூ.443 பிரிமியத் தொகையாகும். பயிர் காப்பீடு செய்ய விவசாயிகள் தங்களுடைய வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை சிட்டா, விதைப்பு சான்று கிராம நிர்வாக அலுவலரின் அடங்கல், புகைப்படம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் அருகிலுள்ள பொது சேவை மையங்களுக்கு எடுத்து காப்பீடு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு ஆண்டிமடம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என ஆண்டிமடம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்(பொ) சுகந்தி தெரிவித்துள்ளார்.

Related Stories: