11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா

மயிலாடுதுறை, அக்.11: கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பினர் மயிலாடுதுறையில் தர்ணா போராட்டம் நடத்தினர். மயிலாடுதுறையில்  தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பின் சார்பில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அ ரசே ஏற்று நடத்திட வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பன போன்ற 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை தாலுகா அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.

கூட்டமைப்பு மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் பழனிவேலு முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் கல்யாணசுந்தரம், கல்லூரி ஓய்வூதியர் சங்கம் பாண்டியன் உட்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் வரவேற்றார். செயற்குழு உறுப்பினர் பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்.

Related Stories: