பூம்புகார் பகுதி ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்

பூம்புகார், அக். 11:  பூம்புகார் பகுதி ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது காவிரிபூம்பட்டினம் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்திற்கு சீர்காழி வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி ரெஜினாராணி தலைமை வகித்தார். கூட்டத்தில் முழு சுகாதார பணியில் ஈடுபட மகளிர் அணி பற்றிய தேர்வு விவாதிக்கப்பட்டது. மழை காலங்களில் கொசுக்களால் ஏற்படும் டெங்கு காய்ச்சல் பற்றியும், பிளாஸ்டிக் பொருள்களை ஒழிப்பதை பற்றியும், தெரு விளக்குகள் பயன்பாடுகள் பற்றியும் தேர்வு செய்யப்பட்டது. இதில்  மகளிர் சுய உதவிக்குழுவினர், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.  ஊராட்சி செயலர் கண்ணன் நன்றி கூறினார். இதேபோல் பூம்புகார் மேலையூர் ஊராட்சியில் நடந்த கூட்டத்தில் குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல்,

மழைகாலங்களில் தேவையற்ற பொருள்களில் தண்ணீர் தேங்கவிடாமல் அப்புறப்படுத்துதல், தொழுநோய் பற்றிய உண்மைகள் மக்களிடையே போய்சேர்தல் பற்றி பொது சுகாதாரத்துறை அலுவலர்கள் கார்த்திக், செந்தில்நாதன், கொளஞ்சி ஆகியோர் எடுத்துரைத்தனர். இதில் பொதுமக்கள் உள்பட மகளிர் சுய உதவிக்குழுவினர் பலர் கலந்துகொண்டனர். ஊராட்சி செயலர் மணிமாறன் நன்றி கூறினார். கீழப்பெரும்பள்ளம் ஊராட்சியில் நடந்த கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய உதவி அலுவலர் கீதா தலைமை வகித்தார். கூட்டத்தில் தனிநபர் கழிப்பறை, டெங்கு காய்ச்சல் பற்றி விசாரித்தல், ஊரக கூட்டமைப்பு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. இதில் பொதுமக்கள், மகளிர் குழுவினர் பலர் கலந்துகொண்டனர். ஊராட்சி செயலர் எழிலரசன் நன்றி கூறினார்.

Related Stories: