மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

கொள்ளிடம், அக்.11:  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் சார்பில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. கொள்ளிடம் ஒன்றியத்துக்குட்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் வசித்து வரும் பிறந்த குழந்தை முதல் பதினெட்டு வயதுள்ள மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது.  முகாமில் 200 மாற்றுதிறன் கொண்ட மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர் பங்கு பெற்றனர். இதில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு அடையாள அட்டை, உதவி தொகை, பராமரிப்பு தொகை, இலவச பஸ் பயணச்சீட்டு ஆகியவைகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

 

முகாமை வட்டார வளமைய மேற்பார்வையாளர்  பூங்குழலி தலைமை வகித்து  துவக்கி வைத்தார். சிஇஓ அமுதா, உதவி திட்ட அலுவலர் பீட்டர் பிரான்சிஸ், உதவி மாவட்ட திட்ட அலுவலர் முத்தெழிலன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  சாம்பசிவம், கொள்ளிடம் வட்டாரக்  கல்வி அலுவலர்கள் செல்வம், பாபு ஆகியோர் பார்வையிட்டனர். வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள் கலந்துகொண்டனர். முகாம் ஏற்பாடுகளை வட்டார ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் செய்திருந்தார்.

Related Stories: