நாகை அருகே விரிசல் விழுந்த விஏஓ அலுவலக கட்டிடம் அச்சத்துடன் பணியாற்றும் அலுவலர்கள்

நாகை, அக்.11: நாகை அருகே விரிசல் விழுந்து சேதமடைந்த விஏஓ அலுவலகத்தால் பணியாற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடனேயே அங்கு வந்து செல்கின்றனர். நாகை தாலுகா சங்கமங்கலத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம்  அருகில் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. சுமார் 15 ஆண்டுகளுக்க முன் கட்டப்பட்ட இந்த கிராம நிர்வாக அலுவலகம் தற்போது சுவர்களில் விரிசல் ஏற்பட்டு சேதம் அடைந்து காணப்படுகிறது. சிமெண்ட் காங்கிரேட் மேற்கூரை மழை பெய்தால் நீர் கசிவு ஏற்படுகிறது.

இதனால் அங்கு வைக்கப்பட்டுள்ள ஆவணங்களை பாதுகாக்க முடியாமல் உள்ளது. விஏஓ அலுவலகத்திற்கு வருகையில் மக்கள் அச்ச உணர்வுடன் வந்து செல்கின்றனர். விஏஓவும் அச்சத்துடனேயே பணியாற்றி வருகிறார். இதனால் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு விஏஓ அலுவலகத்தை பழுதடைந்த கட்டிடத்தில் இருந்து தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும். இல்லையெனில் பழைய கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என்று கிராம மக்கள் அரசை கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Stories: