தரங்கம்பாடி தாலுகா அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் 100 நாள் வேலை திட்டத்தில் வடிகால்களை தூர்வார வேண்டும் விவசாயிகள் கோரிக்கை

தரங்கம்பாடி, அக்.11: தரங்கம்பாடி தாலுகா அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் தாலுகாவில் உள்ள வடிகால்களை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். தரங்கம்பாடி தாசில்தார் சுந்தரம் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் தாலுகா அலுவலகத்தில் நடத்தது. மண்டல துணை தாசில்தார் மகேந்திரன் முன்னிலை வகித்தார். முதுநிலை ஆர்ஐ ராஜீ வரவேற்றார்.

கூட்டத்தில் விவசாயிகள் சொக்கலிங்கம், ஜெயராஜ், பழனியப்பன், ஜோதி, சந்திரசேகரன் உள்ளிட்டோர் பேசுகையில், நெடுவாசல், மேலவெளி, வடிகால்களில் காணு பதிக்க வேண்டும். மகிமலை ஆறு, கண்ணப்பன் மூலை பகுதியில் பாசன வாய்க்கால்களை தூர்வாரி தடுப்பணை பலகையை சீரமைத்து தர வேண்டும். அதே பகுதி மகிமலை ஆற்றில் துணை தடுப்பணை அமைத்து தர வேண்டும்.

திருக்கடையூர் உள்ளிட்ட தரங்கம்பாடி தாலுகா பகுதியில் உள்ள வடிகால்களை தூர்வார 100 நாள் வேலை செய்யும் தொழிலாளர்களை பயன்படுத்த வேண்டும். ஆற்று நீர் கடலில் கலக்காமல் இருக்க அந்தந்த பகுதியில் உள்ள வாய்க்கால்களில் உள்ள அடைப்பு பலகையை சீர் செய்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். கூட்டத்தில்  பொறையார் பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் குணசேகரன், செம்பனார்கோவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நல்லமுத்து, தோட்டக்கலை உதவி அலுவலர் மணிகண்டன், ஆர்ஐக்கள் பழனியப்பன், சுதமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: