வெற்றிலை விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

கரூர்,அக்.11:  வெற்றிலை விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கரூர் அருகே உள்ள புகழூர் வட்டாரத்தில் புகழூர், புங்கோடை, சேமங்கி, முத்தனூர், கோம்புபாளையம், திருக்காடுதுறை உள்ளிட்ட கிராமங்களில் வெற்றிலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வெற்றிலைகளை பறித்து சங்க மண்டி மற்றும் தனியார் வெற்றிலை மண்டிகளுக்கு விவசாயிகள் விற்பனைக்காக அனுப்பி வருகின்றனர். வெற்றிலை கொள்முதல் விலை கடந்த வாரத்தை விட தற்போது குறைந்துவிட்டது.

இளங்கால் வெள்ளக்கொடி 104 கவுளி கொண்ட ஒரு சுமை ரூ.6 ஆயிரத்துக்கு விலை போனது. தற்போது ரூ.3500 ஆக குறைந்துவிட்டது. இதே போன்று முதிகால் வெள்ளக்கொடி வெற்றிலை ஒருசுமை ரூ.3ஆயிரத்தில் இருந்து ரூ.1500ஆக சரிந்தது. இளங்கால் கற்பூரி ரூ.4500ல் இருந்து ரூ.3000 ஆகவும், முதிகால் கற்பூரி ரூ.2500ல் இருந்து ரூ.1500 ஆகவும் விலை குறைந்துவிட் டது. கொள்முதல் பாதியாக விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Related Stories: