அரவக்குறிச்சியில் நாளை தனியார் வேலைவாய்ப்பு, திறன்மேளா முகாம்

கரூர், அக். 11: அரவக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், திறன்மேளா முகாம் நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து ஊராட்சி ஒன்றிய அளவிலான திறன் மேளா மற்றும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளது. 7வது கடடமாக 12ம்தேதி (நாளை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஒன்றிய அலுவலகத்தில் கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் திறன்முகாம் மற்றும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள், தனியார் துறை நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான நபர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். ஆட்டோமொபைல், தொலைத்தொடர்பு, வங்கி நிதி சேவை காப்பீடு, சில்லரை வர்த்தகம், டிராக்டர் ஆபரேட்டர், பேசிக் சீவிங் ஆபரேட்டர், சீவிங் மெஷின் ஆபரேட்டர், டிடிபி,

பிரிண்ட் பப்ளிசிங் அசிஸ்டென்ட், கணினி பயிற்சி, அழகுக்கலை பயிற்சி, செல்போன் ஆபரேட்டர், தையல் எம்ப்ராய்டரிங், வாகன ஓட்டுனர், சமையல் கலை, உதவி செவிலியர் பயிற்சி, அக்கவுண்ட்ஸ் டேலி போன்ற பல்வேறு பயிற்சிகளுக்கு தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி முடிவில் மத்திய அரசு சான்றிதழுடன் தனியார் துறையில் வேலை வாய்ப்பும் பெற்று தரப்படும். பயிற்சி பெறுவோருக்கு பயணப்படி நாள் ஒன்றுக்கு ரூ.100 வழங்கப்படும். விருப்பமுள்ள 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு, டிகிரி, டிப்ளமோ, ஐடிஐ கல்வித்தகுதியுடையவர்கள் தங்களது அசல் கல்விச்சான்றிதழ்கள், நகல் மற்றும் அசல் வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related Stories: