குளித்தலை அருகே டெங்கு காய்ச்சலால் பாதிப்பு லாரி டிரைவருக்கு சிகிச்சை

குளித்தலை, அக். 11: குளித்தலை அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட லாரி டிரைவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த கண்டியூரை சேர்ந்தவர் சிவபெருமாள் (47). லாரி டிரைவர். இவர் கடந்த மாதம் 20ம் தேதி ஜம்மு காஷ்மீருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு கடந்த 4ம் தேதி காய்சல் ஏற்பட்டது. 6ம் தேதி வீட்டிற்கு வந்த சிவபெருமாள் மறுநாள் 7ம் தேதி குளித்தலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்ததால் ரத்தம் மற்றும் பல்வேறு பரிசோதனைகள் செய்ததில் டெங்கு காய்ச்சல் என மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

மேலும் சிவபெருமாளுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது பற்றிய தகவல் அறிந்த மாவட்ட மருத்துவ சுகாதார பணிகள் துணை இயக்குனர் நிர்மல்சன் உத்தரவின் பேரில் நேற்று வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சிவகுமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள், நடமாடும் மருத்துவ குழுவினர்,  கொசுப்புழு தடுப்பு பணியாளர்கள் கண்டியூரில் கொசுப்புழு ஒழிப்பு மருந்துகள் அடித்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியையும் சுத்தம் செய்து சுகாதார பணிகள் மேற்கொண்டனர்.

Related Stories: