கரூர் தாலுகா அலுவலகம் முன் கைவினைஞர் முன்னேற்ற சங்கம் உண்ணாவிரத போராட்டம்

கரூர், அக். 11: கைவினைஞர் முன்னேற்ற சங்கம் மற்றும் தமிழக விஸ்வகர்மா சமுதாய மக்கள் சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. கரூர் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு அவைத்தலைவர் டாக்டர் சண்முகம் தலைமை வகித்தார்.  அகில இந்திய தலைவர் மணிசங்கர் உண்ணாவிரதத்தை துவக்கி வைத்தார். பொதுச் செயலாளர் விசுசிவக்குமார் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார். இதில் துணைச் செயலாளர் குமரேசன், மாநில இளைஞரணி செயலாளர் செங்குட்டுவன், துணைச் செயலாளர் சக்திவேல், துைணத்தலைவர் தங்கவேல், மாநில செயலாளர் ராஜா உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இளைஞரணி நிர்வாகி சந்தோஷ் நன்றி கூறினார்.

விஸ்வ கர்மா ஜெயந்தியை முன்னிட்டு மத்திய அரசு அறிவித்த செப்டம்பர் 17ம் தேதி அரசு விடுமுறையை தமிழக அரசு நடைமுறைப்படுத்திட வேண்டும். பொற்கொல்லர் மற்றும் கைவினைஞர் நலவாரியத்தை மீண்டும் அரசு அறிவிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள 70 லட்சம் விஸ்வகர்மா சமூக மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கிடுவதோடு, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

Related Stories: