நெல்லையில் இருந்து ஜபல்பூருக்கு கரூர் வழியாக வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில்

கரூர், அக். 11:  கரூர் வழியாக நெல்லை- ஜபல்பூருக்கு சூப்பர்பாஸ்ட் ரயில் இயக்கப்படுகிறது. பயணிகள் நெரிசலை தவிர்ப்பதற்காக வாராந்திர சூப்பர் பாஸ்ட் சிறப்பு கட்டண ரயில் நெல்லையில் இருந்து ஜபல்பூருக்கு இயக்கப்படுகிறது. சனிக்கிழமைகளில் திருநெல்வேலியில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு திங்கள் காலை 11.15 மணிக்கு ஜபல்பூரை அடைகிறது. வரும் 13, 20, 27, நவம்பர் 3, 10, 17, 24, டிசம்பர் 1, 8, 15, 22, 29ம் தேதி என 12சர்வீஸ் இயக்கப்படுகிறது.

இந்த ரயிலில் ஏசி 2 டயர், 1, ஏசி 3 டயர் 2, சிலீப்பர் கிளாஸ் 10, பொதுபெட்டிகள் 4, சரக்குபெட்டிகள் 2 இணைக்கப்பட்டிருக்கும்.   கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், ராசிபுரம், சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, திருத்தணி, ரேணிகுண்டா, குண்டூர், நெல்லூர், ஓங்கோல், விஜயவாடா, கம்மம், வாரங்கல், ராமகுண்டம், சிர்புர்கஹசநகர், பாலர்ஷா, சாந்தர்புர், சேவாக்ரம், நாக்பூர், இடர்சி, பிபரியா, கடர்வாரா, நரசிங்புர் ஆகிய இடங்களில் நின்று செல்லும் என சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: