குடிமராமத்து பணிகளுக்கு கூடுதல் நிதி பாசன கூட்டமைப்பு வலியுறுத்தல்

ஈரோடு, அக்.5:  கீழ்பவானி வாய்க்காலில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள கூடுதல்நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக கூட்டமைப்பின் செயலாளர் வடிவேல், தலைவர் காசியண்ணன் ஆகியோர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:  கீழ்பவானி வாய்க்கால் பாசன பகுதிகளில் குடிமராமத்து பணிகள் நடந்து வருகிறது. இத்திட்டத்திற்காக கடந்த 2016-17ம் ஆண்டில் ரூ. 4.30 லட்சமும், 2017-18ம் ஆண்டில் ரூ.8.9 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் பாசன சபை மூலம் மண் வேலை, கட்டிட வேலைகள் மேற்கொள்ளப்பட்டன.   இரண்டு ஆண்டுகளிலும் துார்வாரும் பணி 10 சதவீதமும், கட்டிட வேலைகள் 90 சதவீதமும் விவசாயிகள் கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட்டது. பணிகள் இன்னும் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ளது. எனவே விவசாயிகளின் நலன் கருதி குடிமராமத்து பணிகளை செய்வதற்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஈரோடு பள்ளி மாணவிகளிடம்

Related Stories: