சிப்காட்டில் இன்று மின்நிறுத்தம்

ஈரோடு, அக். 5: பெருந்துறை சிப்காட் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 5ம்தேதி (இன்று) நடைபெறவுள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பெருந்துறை கோட்டத்தை சார்ந்த பெருந்துறை மேற்கு பகுதிக்குட்பட்ட கோட்டைமேடு, கருக்கங்காட்டூர், பெரியமடத்துபாளையம், சின்னமடத்துபாளையம், கள்ளியம்புதூர், மாயா அவென்யூ உள்ளிட்ட பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளது. இதேபோல தளவாய்பேட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 5ம்தேதி (இன்று) நடைபெறவுள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தளவாய்பேட்டை, ஜம்பை, பெரியவடமலைபாளையம், பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளதாக மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: