பெண்களுக்கு ‘ஜாலி’

வனத்துறையின் சார்பில் அடிவாரத்திலிருந்து அடிவாரம் செல்லும் வரை படிக்கட்டு வசதிகளும், அருவியில் பெண்கள் குளிப்பதற்காக மறைவாக தனி இடமும், உடை மாற்றுவதற்காக தனி அறையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளிடம் நபர் ஒன்றிற்கு ரூ.10 வீதம் வனத்துறை மற்றும் வனக்குழு மூலம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் வனத்துறையின் இம்மாதிரியான ஏற்பாட்டினால் பெண்கள் தொந்தரவின்றி அருவியில் குளிக்கலாம்.

மது பிரியர்களுக்கு ‘ஆப்பு’இன்று முதல் அருவியில் குளிக்க பொதுமக்கள் அனுமதிக்கப்பட உள்ள நிலையில் வனப்பகுதியின் சுற்றுச்சூழல் நலன் கருதி அருவியின் அடிவாரத்திற்கு மேல் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்கள், சோப்பு, ஷாம்பு மற்றும் மது, உணவு பொருட்கள் போன்றவற்றை மேலே கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், சோதனைக்கு பின்னரே சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனவும் சோழவந்தான் வனத்துறை வனச்சரகர் ஆறுமுகம் தெரிவித்தார்

Related Stories: