ஓடைகளை ஆக்கிரமித்த குடியிருப்புகளால் ஆபத்து

திருப்பூர், அக்.7: திருப்பூர் மாநகர் காங்கயம் ரோட்டில் நீர்வழி ஓடைகளை ஆக்கிரமித்து நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளதால் வெள்ளப்பெருக்கு சமயத்தில் பெரும் சேதம் ஏற்படும் நிலை உள்ளது.

 திருப்பூர் மாநகர் பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான பின்னலாடை நிறுவனங்களில் லட்சக்கணக்கான கூலி தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு  குறைவான வருவாய் கிடைப்பதால் பெரும்பாலும் புறம்போக்கு நிலங்கள், நீர்வழி ஓடைகளை ஆக்கிரமித்து குடிசைகள் அமைத்து வசித்து வருகின்றனர். திருப்பூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் குடிசைகளுக்குள் மழை நீர் புகுந்து உயிர்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு மின் இணைப்பு உள்ளிட்ட பல வசதிகள் செய்து இதுபோன்ற ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது. நீர்வழிப்பாதை, புறம்போக்கு நிலத்திலுள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: