வெள்ளக்கோவில் அருகே கிராமங்களில் ெதாடர் மின்தடை

வெள்ளக்கோவில், அக்.7: வெள்ளக்கோவில் அருகே 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.  வெள்ளக்கோவில் அருகே முத்தூர் துணை மின்நிலையத்தில் இருந்து செட்டியார்பாளையம், மேட்டாங்காட்டுவலசு, முருகம்பாளையம், குளத்துபாளையம், அமராவதிபாளையம், பாப்பினி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்விநியோகம் செய்யப்படுகிறது.

 இந்நிலையில், கடந்த 2 வாரங்களாக இக் கிராமங்களில் முன்னறிவிப்பின்றி அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

 இதுகுறித்து பாப்பினியைச் சேர்ந்த வேலுசாமி கூறுகையில்,`எங்கள் பகுதியில் கடந்த 2 வாரமாகவே அவ்வப்போது மின்தடை ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, கடந்த வாரம் பெரும்பாலான நாட்கள் இரவு 7 மணி முதல் அடுத்தநாள் காலை தற்போது இரவு நேரத்தில் சுமார் 15 முறை மின்தடை ஏற்படுகிறது. இதனால், பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள், வயதானவர்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். இதுகுறித்து முத்தூர் துணை மின்நிலையத்துக்கு போன் செய்தால் போனை எடுப்பதில்லை. எனவே, மின்வாரிய அதிகாரிகள் இப் பிரச்னையில் தலையிட்டு தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.

Related Stories: