மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.5 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு

திருப்பூர், அக்.7: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்கீழ் 325 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.6.15 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை உள்ளாட்சி–்த்துறை அமைச்சர் வேலுமணி நேற்று வழங்கினார். விழாவுக்கு சபாநாயகர் தனபால் தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, கலெக்டர் பழனிச்சாமி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன செயல் அலுவலர் சந்திரகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் முதன்மை செயல் அலுவலர் பிரவீன்நாயர் வரவேற்றார். விழாவில், அமைச்சர் வேலுமணி பேசியதாவது: தமிழகம் முழுவதும் 6.62 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உள்ளன. இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளில் ரூ.44 ஆயிரத்து 756 கோடி வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பல்வேறு தொழில்களில் வருவாய் ஈட்டி வாழ்வாதாரத்தை மேம்படுத்தி உள்ளனர்.2018-2019ல் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.5 ஆயிரம் கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அம்மா இரு சக்கர வாகனத்திட்டத்தின் கீழ் இதுவரை 40 ஆயிரத்து 225 வாகனங்கள் மகளிர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இத் திட்டத்திற்காக, ரூ.100 கோடியை அரசு மானியமாக வழங்கி உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

 விழாவில், அமைச்சர் ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் ஆனந்தன், பொள்ளாச்சி எம்.பி. மகேந்திரன், எம்.எல்.ஏ.க்கள் குணசேகரன் விஜயகுமார், தனியரசு, மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமி, திருப்பூர் சார் ஆட்சியர் ஷ்ரவன் குமார், எஸ்பி கயல்விழி, மாநகராட்சி கமிஷனர் சிவகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: