குன்னுாரில் பேரிடர் மீட்புக்குழு

குன்னூர்,அக்.7: நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் பலத்த மழை  பெய்யும் என்ற வானிலை அறிவிப்பின் காரணமாக அனைத்து அரசுத்துறைகளும்  விழிப்புடன் இருக்க  தமிழக அரசு அறிவுரை வழங்கியுள்ளது.

இதன்பேரில்  காவல்துறை சார்பில்  அதிரடிப்படையினருடன் கூடிய பேரிடர் மீட்பு குழு  மேற்குமண்டல ஐஐி  பெரியய்யா அறிவுரையின் பேரில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 28 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் குன்னூரில் மழையினால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளுக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட உள்ளனர்.  இதுதவிர 30 பேர்  கொண்ட பேரிடர் மீட்புக்குழு சென்னையிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஊட்டியில் மழை பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுபட உள்ளனர்.நீலகிரி மாவட்ட எஸ்.பி சண்முகப்பிரியா நிருபர்களிடம் கூறியதாவது: மழை அதிகரிக்கும் போது குன்னூர்- மேட்டுப்பாயைம் சாலையில் மண்சரிவு மற்றும் மரங்கள் விழும் அபாயம் இருக்கிறது. மழை அதிகமாக பெய்தால்  வாகனங்கள் கோத்தகிரி வழியாக மேட்டுப்பாளையம் மற்றும் கோவை போன்ற வெளியூர்களுக்கு திருப்பி விடப்படும் என்றார்.

Related Stories: