சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு

ஈரோடு, அக். 7: சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது  தொடர்பாக கலெக்டர் கதிரவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  தமிழ்நாட்டில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள  இஸ்லாமியர், கிறித்துவர், சீக்கியர், புத்த, பார்சி மற்றும் ஜைன மதத்தை  சார்ந்த அரசு, அரசு உதவி பெறும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட  தனியார் கல்வி நிறுவனங்களில் நடப்பு கல்வியாண்டில் ஒன்று முதல் 10ம்  வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி படிப்பு கல்வி  உதவித்தொகையும், 11ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயிலும்  மாணவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட உள்ளது.  எனவே  ஈரோடு மாவட்டத்தில் உள்ள கல்வி நிலையங்களில் பயின்று வரும் சிறுபான்மையின  மாணவ, மாணவியர்கள் பள்ளி மற்றும் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை பெற  தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் கடந்த மாதம் இறுதி வரை விண்ணப்பிக்கலாம்  என்று அறிவிக்கப்பட்டிருந்தது.   இந்நிலையில் விண்ணப்பிப்பதற்கான  காலநீட்டிப்பு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி இம்மாதம் இறுதி வரை  விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: