கார் பழுதால் உயிரை இழந்த வியாபாரிகள்

ஈரோடு வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த தோல் வியாபாரி முத்து (எ) முத்தான்(65). இவரது நண்பர்களான சக வியாபாரிகள் மாமரத்துப்பாளையத்தை சேர்ந்த குருசாமி(65), திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த பூரணசாமி(39) இவர்கள் 3 பேரும் நேற்றுமுன்தினம் காலை காரில் வியாபாரம் சம்பந்தமாக கர்நாடக மாநிலம் மைசூர் சென்றுவிட்டு, ஈரோடு செல்ல காரில் திரும்பினர் அப்போது, ஆசனூர் அருகே கார் பழுது ஏற்பட்டு நின்றது.  காரை பழுது நீக்க முடியாததால் 3 பேரும் ஈரோடு செல்ல இந்த பஸ்சில் ஏறி பின்சீட்டில் அமர்ந்து வந்தபோது கால்மணி நேரத்தில் பஸ் பள்ளத்தாக்கில் பாய்ந்து ஏற்பட்ட விபத்தில் முத்துவும், குருசாமியும் பரிதாபமாக உயிரிழந்தனர். படம் புட்நோட் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து கிடக்கும் பஸ்

விபத்தில் உயிரிழந்த தோல் வியாபாரிகள் முத்து, குருசாமி

Related Stories: