கோவை, ஈரோடு உள்ளிட்ட 7 மாவட்டகளில் 576 பள்ளிகளுக்கு அங்கீகார ஆணை

ஈரோடு, அக்.7: ஈரோடு, கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் செயல்பட்டு வரும் 576 மெட்ரிக் பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகார ஆணைகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று வழங்கினார். தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளும் நகர் மற்றும் ஊரமைப்புதுறை, உள்ளூர் திட்டக்குழுமம் அல்லது சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் கட்டிட வரைபட அனுமதி பெற்று சமர்பிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தற்காலிக தொடர் அங்கீகாரம் ஆணை வழங்கப்பட்டு வருகின்றது.  இந்நிலையில், ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர், நீலகிரி ஆகிய 7 மாவட்டங்களை சேர்ந்த 576 மெட்ரிக் பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகார ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி ஈரோட்டில் நேற்று நடந்தது.  ஈரோடு அடுத்துள்ள திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பணன் முன்னிலை வகித்தார். ள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு 576 பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகார ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் ஈரோடு மேற்கு தொகுதி எம்எல்ஏ ராமலிங்கம், கிழக்கு தொகுதி தென்னரசு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச ஷூ வழங்க முடிவு ஈரோட்டில் அரசு உதவி பெறும் கலைமகள் தொடக்கப்பள்ளியில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.24 லட்சம் செலவில் 3 கூடுதல் வகுப்பறை கட்டப்பட்டது. இந்த வகுப்பறை கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாடல் பள்ளி தொடங்கப்பட உள்ளது. இதற்காக மாவட்டத்திற்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையும், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையும் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு புதிய சீருடை மாற்றப்பட்டு உள்ளன.இதில் 4 செட் சீருடை இலவசமாக வழங்கப்படும். இதேபோல் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் காலணிகளுக்கு பதிலாக ‘ஷூ’ வழங்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. தமிழக முதல்வரிடம் ஒப்புதல் பெற்ற உடன் நடவடிக்கை எடுக்கப்படும்.இதுபோன்ற நடவடிக்கையால் தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவுக்கு அரசு பள்ளிகள் செயல்படும்.இவ்வாறு அவர் பேசினார். இதேபோல் ஈரோடு குமலன்குட்டை அரசு மேல்நிலை பள்ளியில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் 2 கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கான பூமி பூஜையை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.

Related Stories: