கூலியை குறைத்து தருவதாக கூறி கிராம மக்கள் திடீர் போராட்டம்

கொடுமுடி,அக்.7: ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே கொளாநல்லி ஊராட்சியில் நூறுநாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், வேலை செய்யும் பயனாளிகளுக்கு கூலியை குறைத்து வழங்குவதாக கூறி போராட்டம் நடந்தது.  கொளாநல்லி ஊராட்சியில் நூறுநாள் வேலை திட்டத்தின் கீழ் 600 பயனாளிகள் உள்ளனர். இவர்களில் 75 பேர் நேற்று காலை வழக்கம் போல் வேலைக்கு வந்தனர். பணிக்கு வந்தவர்கள் தங்களுக்கு நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு அரசு நிர்ணயித்த கூலி தொகையான ரூ.224 தராமல் ஊராட்சி சார்பில் 100 ரூபாய் மட்டும் வழங்குவதாகவும் அரசு நிர்ணயித்த முழு தொகையையும் வழங்க கோரியும் திடீர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட பயனாளிகளிடம் கொடுமுடி யூனியன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குப்புச்சாமி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, அரசு நிர்ணயித்த தொகையை வழங்கப்படும் என உறுதி அளித்தார். இதனை அடுத்து வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது.

Related Stories: