திருவண்ணாமலை கோர்ட் தீர்ப்பு தந்தையை கொன்ற வழக்கில் மகனுக்கு ஆயுள் தண்டனை: மனைவி பிரிந்து சென்ற ஆத்திரத்தில்

திருவண்ணாமலை, அக்.11: குடும்ப தகராறில் தந்தையை தடியால் அடித்து கொலை செய்த மகனுக்கு, ஆயுள் தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட் தீர்ப்பு அளித்தது. திருவண்ணாமலை அடுத்த அழகானந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு. இவரது மகன் சக்கரவர்த்தி(40), விவசாயி. இவரது மனைவி தீபா. இருவருக்கும் திருமணமாகி 15 ஆண்டுகளாகிறது. கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையில், கடந்த 2015ம் ஆண்டு தீபா கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். பலமுறை நேரில் சென்று குடும்பம் நடத்த வருமாறு தீபாவை, சக்கரவர்த்தி அழைத்துள்ளார். ஆனால் தீபா செல்ல மறுத்துவிட்டார். எனவே, தீபாவை சமாதானப்படுத்தி அழைத்து வருமாறு, தந்தை வேலு மற்றும் தாய் யசோதாவிடம் சக்கரவர்த்தி கேட்டுக்கொண்டார். ஆனால், மருமகளை அழைத்துவர இருவரும் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

அதனால், கடந்த 11.9.2015 அன்று இரவு தனது பெற்றோரிடம், சக்கரவர்த்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, ஆத்திரமடைந்த சக்கரவர்த்தி, தடியால் தந்தையை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த வேலு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுதொடர்பாக, வெறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்கரவர்த்தியை கைது செய்து, திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை மாவட்ட நீதிபதி மகிழேந்தி நேற்று விசாரித்து சக்கரவர்த்திக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார். மேலும், ஆயிரம் ரூபாய் அபராதமும், அதை செலுத்தத் தவறினால் கூடுதலாக 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தார்.

இதையடுத்து, சக்கரவர்த்தியை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச்சென்று, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். (நியூ) போலி ஆவணம் தயாரித்து 77 சென்ட் நிலம் அபகரிப்பு

Related Stories: