அரசு பணியிடங்களை ஒழித்திட வகை செய்யும் பணியாளர் சீரமைப்பு குழுவை கலைக்க வேண்டும் நெடுஞ்சாலை பணியாளர் சங்கத்தினர் வலியுறுத்தல்

புதுக்கோட்டை, அக்.10: தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது.

மாவட்ட பொருளாளர் செங்குட்டுவன் தலைமை வகித்தார். கூட்டத்தில் அரசு பணியிடங்களை ஒழித்திட வகை செய்யும் பணியாளர் சீரமைப்பு குழுவை கலைக்க வேண்டும். அரசாணை 56ஐ ரத்து செய்ய வேண்டும். சாலை பராமரிப்பு பணிகளை தனியாருக்கு கொடுப்பதை கைவிட வேண்டும். சாலை பணியாளர்களை திறன்மிகு இல்லா ஊழியராக அறிவித்து, புதிய ஊதியம் நிர்ணயம் செய்து நிலுவை தொகையினை வழங்க வேண்டும். 41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக அறிவிக்க வேண்டும். இறந்த சாலை பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும்.

சீருடை, சலவைப்படி, விபத்துப்படி, சைக்கிள்படி உள்ளிட்ட படிகளை வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலியாக உள்ள சாலை பணியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சாலை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: