கறம்பக்குடி பல்லவராயன்பத்தையில் பழுதடைந்த அரசு பள்ளி கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்ட வேண்டும் ஆணையரிடம் எம்எல்ஏ பெரியண்ணன் அரசு வலியுறுத்தல்

கறம்பக்குடி, அக். 10: கறம்பக்குடி ஊராட்சிக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்லவராயன்பத்தை ஆதி திராவிடர் தெருவில் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்க பள்ளி செயல்பட்டு வருகிறது இப்பள்ளியில் 40க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியானது கடந்த சில மாதங்களாக மேற்கூரையில் உள்ள சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் வகையில் உள்ளது. எந்த நேரத்திலும் இடிந்து விழக்கூடிய அபாய நிலையில் காணப்படுகிறது. மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கருதி அருகில் அமைந்துள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தில் வகுப்புகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இது குறித்து நேற்றுமுன்தினம் புதுக்கோட்டை தொகுதி திமுக சட்ட மன்ற உறுப்பினர் பெரியண்ணன் அரசுவிடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் உடனடியாக நேற்று பல்லவராயன்பத்தைக்கு வந்த எம்எல்ஏ பெரியண்ணன் அரசு  பள்ளி கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய ஆணையர் நலதேவனை போனில் தொடர்பு கொண்டு உடனடியாக பழுதடைந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டு கொண்டார்.

ஒன்றிய ஆணையர், அனைத்து முயற்சிகளும் உடனடியாக மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தார். மேலும் பெரியண்ணன் அரசு,  மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வி அதிகாரிகளையும் போனில் தொடர்பு கொண்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டு கொண்டார். ஆய்வின்போது பள்ளி தலைமை ஆசிரியை சீதாலட்சுமி, வடக்கு மாவட்ட திமுக இலக்கிய அணி துணை அமைப்பாளர் என்.ஆர்.பரிமளம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணசுந்தரம்,  பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் செல்வராஜ், பல்லவராயன்பத்தை ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் வீரா ராமையன் உடன் இருந்தனர்.

Related Stories: