பெரம்பலூர் வந்த தாமிரபரணி மகாபுஷ்கர விழிப்புணர்வு ரத யாத்திரைக்கு வரவேற்பு

பெரம்பலூர்,அக்.10: பெரம்பலூரில் தாமிரபரணி மகாபுஷ்கர விழிப்புணர்வு ரதயாத்திரைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. உலகமெங்கும் இல்லாதவகையில் நதிகளை தெய்வமாக வணங்கி வழிபடும் உன்னத கலாச்சாராரத்தை கொண்டது இந்து கலாச்சாரமாகும். அதனையொட்டி 144 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் தாமிரபரணி மகாபுஷ்கரம் விழாவையொட்டி நர்மதை புனிதநீர் தாங்கிய ரிஷபராசி ரதமானது நேற்று பெரம்பலூர் 4 ரோடு வழியாக வருகை தந்து பெரம்பலூர் நகருக்குள் வந்தது. இதற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் ராஜசேகரன், நகர இணை செயலாளர் கண்ணுசாமி, மாவட்ட இணை செயலாளர் ரகுராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரம்பலூர் நகர செயலாளர் ஹரிஹரன் சிறப்புரை பேசினார்.

இதில் மூத்த வழக்கறிஞர் பிரசன்னம், ஸ்ரீராமகிருஷ்ணா கல்விக்குழுமங்களின் நிறுவனர் தலைவர் சிவசுப்ரமணியம், செயலாளர் விவேகானந்தன் மற்றும் சங்க பரிவார அமைப்புகளின் பொறுப்பாளர்கள், இந்து முன்னணி அமைப்பினர் ஏராளமானோர் காவிக்கொடிகளுடன் கலந்து கொண்டனர். இந்த ரதயாத்திரை பெரம்பலூர் அகிலாண்டேஸ்வரி சசேத பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் நிறுத்தப்பட்டு பிறகு சிறப்பு பூஜை வழிபாட்டிற்கு பிறகு பெரியகடைவீதி, பழைய பஸ்டாண்டு, காமராஜர் வளைவு, சங்குப்பேட்டை, பாலக்கரை வழியாக தாமிரபரணி புஷ்கர விழாவிற்கு புறப்பட்டு சென்றது. இதனை நகர மக்கள் பக்தியுடன் கண்டுகளித்தனர்.

Related Stories: